Strict Standards: AAM_Core_Restful_SupportService and AAM_Core_Restful_ServiceTrait define the same property ($_instance) in the composition of AAM_Core_Restful_SupportService. This might be incompatible, to improve maintainability consider using accessor methods in traits instead. Class was composed in /home/pcetac/public_html/wp-content/plugins/advanced-access-manager/application/Core/Restful/SupportService.php on line 202

“Imaginathon” – An event to bring out the Innovative skills of Students

Posted on June 14, 2022

 

கோவை 01 Dec 2020 : கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழும வளாகத்தில்,  “IMAGINATHON ” என்னும் நிகழ்வின் பரிசளிப்பு விழா இணைய வழியாக சிறப்பாக நடைபெற்றது.

IMAGINATHON  என்னும் நிகழ்வு பள்ளி மற்றும் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ மாணவியரின் திறமைக்கு சவாலான அறிவியல், கலை மற்றும் விளையாட்டு போட்டிகளை உள்ளடிக்கியது. IMAGINATHON – படைப்பாற்றல் மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிக்கும் விழா.

Imaginathon” என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல, மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளினால் இந்த உலகிற்கு உபயோகமாக இருக்கும் சாதனங்களை உருவாக்க ஊக்குவிக்கும் நிகழ்ச்சி.

தமிழ்நாட்டிலுள்ள அணைத்து  மாவட்டங்களிலிருந்தும்  சுமார்  650 மாணவ, மாணவியர் 41 பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து  பங்குபெற்று தங்களது திறமைகளை இணைய வழியாக அனுப்பி இருந்தனர்.

பத்ம ஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை இணையவழியில்  சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு  நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் G மோகன் குமார் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.

பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், முனைவர் அனுஷா ரவி அவர்கள் தனது உரையில், ஒரு நெடுந்தூர ஓட்டத்திற்கு (Marathon) நம்மையே நாம் தயாரிப்பதுபோல, பொறியியல் மற்றும் தொழிநுட்பத்திற்க்காக நமது மூளையை தயாரிப்பதே “Imaginathon” நிகழ்வின் நோக்கம்.  வாழ்க்கையில் வெற்றிபெற நமது கற்பனை திறனையும், ஆக்கப்பூர்வமான மூளையையும் வளர்த்து கொள்ளவேண்டும்.

சூரரை போற்று என்னும் திரைப்படத்தில் ஒரு ஊரையே விமானத்தில் முதல்முறையாக அழைத்து செல்வதுபோல நான் விண்வெளிக்கு கூட்டி செல்லவேண்டும் என்று தங்கள் கல்லூரி மாணவர் சொன்னதை உதாரணமாக சுட்டி காண்பித்து, மாணவர்கள் கனவுகளோடு உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ  மயில்சாமி அண்ணாதுரை,  ஏன், எப்படி, எதனால் என்று யோசிப்பதே அறிவியல். அதை செயல்படுத்துவதே பொறியியல், அதை இன்னும் சமுதாயம் பயன் பெரும் வகையில் வடிவமைப்பதே தொழில்நுட்பம் என்று தனது உரையை துவக்கினார். 

ஒரு சக்கரம் வடிவமைப்பது என்பது கண்டுபிடிப்பு (Invention), அதை எவ்வளவு சிறப்பாக சமுதாயம் உபயோகிக்க முடியும் என்று செயல் படுத்துவதே புதுமை (Innovation).  

பொறியியல் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.  உங்களை நீங்கள் தகுந்த முறையில் தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.  அதற்க்காக மூன்று விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும். 1. நீங்கள் தேர்ந்தெடுத்த துறையை விரும்பவேண்டும். 2. அந்த துறையில் தங்களது தகுதி, திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும்.3. சமுதாயத்தில் மதிப்புள்ள வகையில் தங்களது கண்டுபிடிப்பு மற்றும் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். 

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை வாய்ப்புகளாக பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். 

பார்க் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் கிறிஸ்டோ தேவா அந்தோணி மற்றும் லோகேஷ் தங்களது திட்டம் (Project) பற்றி எடுத்துரைத்தார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்களுக்கான பரிசுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

முதலாம் ஆண்டு துறை தலைவர், முனைவர் ஹரிஹரன் நன்றியுரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Photo 

Dr. Anusha Ravi, CEO, Park Institutions

Dr. G Mohan Kumar, Principal, PCET (in the background)

MRS. Anusha Ravi Presented Speech for Innovative skills of Students in PCET

 

Upcoming Events

 

Latest News

 

Quick Links