Park College of Technology : World Environment Day 2022
Posted on June 16, 2022
06 Jun 2022 : பார்க் தொழில்நுட்பக் கல்லூரி : உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடப்பட்டது
கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக சுற்றுச்சுழல் தினம் கல்லூரியின் வளாகத்தில் மிக சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை கல்லூரியின் சுற்றுச்சுச்சூழல் பொறியியல் துறையின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி அவர்கள் முன்மொழிய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுற்றுச்சூழலின் தோழனாய் இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் சுற்றுச்சூழல் பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக நூறு மரக்கன்றுகள் Dr. அனுஷா ரவி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகளை கல்லூரியின் முன்னாள் மாணவர் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சி மற்றும் வாழ்த்துரைகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.