Strict Standards: AAM_Core_Restful_SupportService and AAM_Core_Restful_ServiceTrait define the same property ($_instance) in the composition of AAM_Core_Restful_SupportService. This might be incompatible, to improve maintainability consider using accessor methods in traits instead. Class was composed in /home/pcetac/public_html/wp-content/plugins/advanced-access-manager/application/Core/Restful/SupportService.php on line 202

Workshop of Dept of Geo Informatics

Posted on June 16, 2022

 

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

சர்வதேச மூன்று நாள் Google Earth Engine பயிற்சி பட்டறை

கோவை 07 Apr : பொறியியலில் சில இணை/துணை பாடங்களை கற்றுக்கொள்வதால் வேலை தேடுபவர்களாக அல்ல வேலை வாய்ப்பு உருவாக்குபவர்களாக மாறலாம்.- முனைவர் Anil Dattatraya Sahasrabudhe, தலைவர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, நியூ டெல்லி

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் Geo informatics துறையின் சார்பாக சர்வதேச மூன்று நாள் Google Earth Engine பயிற்சி பட்டறை துவக்க விழா 07 Apr நடைபெற்றது.

இந்த மூன்று நாள் பயிற்சி பட்டறையில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு Google Earth Engine செயல்பாடு பற்றி செயல்முறை விளக்கத்துடன் தெளிவு படுத்த உள்ளார்கள்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர். மோகன் குமார் அனைவரையும் வரவேற்றார்.

பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர், முனைவர். அனுஷா ரவி தனது உரையில் Geo informatics துறையின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு இப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, நியூ டெல்லியின் தலைவருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வை இணைய வாயிலாக துவக்கிவைத்து  முனைவர் Anil Dattatraya Sahasrabudhe, தலைவர், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, நியூ டெல்லி தனது உரையில், Environmental, Geo Informatics போன்ற புதிய துறைகளை ஆர்வத்துடன் துவக்கி கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கும் பார்க் கல்விக்குழுமத்திற்கு தனது பாராட்டுகளை  தெரிவித்துக் கொண்டார்.

பொறியியலில் சில இணை/துணை பாடங்களை கற்றுக்கொண்டு பொறியாளர்கள் வேலை தேடுபவர்களாக அல்ல வேலை வழங்குபவர்களாக வளர வேண்டுமென்று கூறினார்.

மேலும் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள்  பொழுதுபோக்கிற்காக மற்றும் அல்லாமல் கல்விக்காகவும் பெரிதும் பயன்படுகிறது என்று கூறி Geo Informatics துறையினரை பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

துருக்கியின் Yildiz பல்கலைக்கழகத்தின் Geomatic துறையின் பேராசிரியர் முனைவர். Fusun Balik Sanli, UTM மலேசியா பல்கலைக்கழகத்தின் Geo Information துறை பேராசிரியர் முனைவர்.கஸ்தூரி தேவி மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் முனைவர்.சரவணன் உலகில் எவ்வாறு Google Earth Engine பயன்படுத்தப்படுகிறது என்பதுபற்றி உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில் நினைவுப்புத்தகம் வெளியிடப்பட்டது.

  பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் Geo informatics துறையின் தலைவர், முனைவர். செல்வராஜ் நன்றி நவில, துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

Photo From Left To Right 

Dr. Anusha Ravi, CEO, Park Institutions

Dr. Mohan Kumar, Principal, PCET

Manoj Kumar, Asst Prof, Dept of Geo Informatics, PCET

Dr. Selvaraj, HOD, Dept of Geo Informatics, PCET

Abinaya, Asst Prof, Dept of Geo Informatics, PCET

 

 

Workshop of Dept of Geo Informatics at Park College - Best Gep Informatics engineering College, Coimbatore

Upcoming Events

 

Latest News

 

Quick Links